பொய்கையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று மாட்டு சந்தை நடப்பது வழக்கம். அதன்படி இன்று காலை மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர். வெளியூர்களிலிருந்து மாடுகள் வாங்கிச் செல்லவும் கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரத்தை விட கால்நடைகளின் வரத்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது இதனால் இன்று மட்டும் சுமார் ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.