உத்தரபிரதேசத்தில் பிராய்லர் கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநர் தூங்கியதால் திடீரென கவிழ்ந்தது. சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் இருந்து கீழே விழுந்த பிராய்லர் கோழிகளை அபேஸ் செய்துகொண்டு அங்கிருந்து ஓடினர். ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், மக்கள் இவ்வாறு கோழிகளை எடுத்துசென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.