உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்ல ரயில் நிலையங்களில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் இடம் கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் சிலர், குளிர்சாதன பெட்டிகளின் ஜன்னல், கண்ணாடிகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இதுஒரு புறம் இருக்க ரயில்களின் மீது கற்களை எறிந்தும், பயணிகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.