மகாராஷ்டிரா: மும்பை மஸ்ஜித் பந்தர் பகுதியில் 11 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தார். குடியிருப்பில் இன்று காலை 6.11 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியில், சபிலா காதும் ஷேக் (42) சஜியா ஆலம் ஷேக் என்கிற 2 பெண்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.