பாதாமில் கர்ப்பிணிகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பிணிகள் இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது பெரிதும் பயனளிக்கும். இதில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும் உணவில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலால் உறிஞ்சப்படுவதற்கு பாதாம்கள் உதவுகின்றன.