மூத்த தெலுங்கு திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி தனது 102வது வயதில் இன்று (பிப். 16) காலமானார். ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் பிறந்த அவர் கடந்த 1938-ல் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ள கிருஷ்ணவேணி நடிகரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவை 'மன தேசம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.