நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி

74பார்த்தது
வேலூரில் உள்ள சி. எம். சி தனியார் மருத்துவமனையில் கடந்த 14. 03. 2024 முதல் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவரை இன்று திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் எஸ். வி சேகர் செய்தியாளர்களை சந்தித்துகூறுகையில் என்னுடைய நண்பர் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரைதயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன் நல்ல முறையில் சிகிச்சை அவருக்கு அளித்துள்ளனர் கடவுள் அருளால் அவர் மீண்டு நல்லமுறையில் வருவார் அண்ணாமலை தோல்வி என்பது அவராலேயே வந்தது அவர் கடப்பாரை எடுத்து அவரே குத்திகொண்டார் 13 இடங்களில் பாஜக டெபாசிட்டே இல்லை கலைஞர் 101 ஆவது பிறந்த நாள் பெரிய அளவில் கொண்டாடும் வகையில் முடிவுகள் வந்துள்ளது தேர்தலில் கூட்டணியை கலையாமல் சிந்தாமல் சிதறாமல் ஸ்டாலின் பார்த்துகொண்டார் 40 - 40 இடங்களில் திமுக கூட்டணி ஜெயித்துள்ளது இந்திய கூட்டணி அதிக இடங்களில் வெல்ல காரணம் திட்டமிடலும் ஸ்டாலினின் உழைப்பும் தான் அண்ணாமலை தலைமையில் பாஜக பூஜியத்தை அடைந்துள்ளனர் நான் சோவின் மானசீக சீடன் என்னால் எந்தகுதிரை ஓடும் ஓடாது என சொல்ல முடியும் அப்போதே பாஜக குதிரை குப்புற கவிழ்ந்தது என கூறினார்.

தொடர்புடைய செய்தி