திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா ஆம்பூர் விண்ணமங்கலம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (இன்று அக்டோபர் 20 மாலை) முன்னால் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது பின்னால் வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மினி வேன் ஓட்டுனர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் ஏற்பட்ட நபர்கள் அனைவரும் மயங்கிய நிலையில் உள்ளனர். காயம் அடைந்தவர்களின் பெயர், ஊர் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.