திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சாய்பாபா கோயில் தெரு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருப்பதை கண்ட கண்ணதாசன் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஐந்தடி நீளம் உள்ள சாரை பாம்பை லாபகரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.