ஒற்றை கொம்பன் யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு!

62பார்த்தது
ஒற்றை கொம்பன் யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி, கீழ் முருங்கை அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒற்றை கொம்பன் யானை புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அலுவலர் பாபு தலைமையிலான அதிகாரிகள் சென்று பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

அப்போது கீழ்முருங்கை பகுதி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் யானை சென்றது. உடனடியாக போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர். யானை சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் உலாவி விட்டு பின்னர் கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் புகுந்தது. மேலும் கீழ் முருங்கை பகுதியில் ஓட்டல் அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை யானை மிதித்து சேதப்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் ஒன்றை கொம்பன் யானை கீழ்முருங்கை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. வனத்துறை அதிகாரிகள் போக்குவரத்தை நிறுத்தி யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். மாதனூர் அடுத்த பாலூர் பகுதியில் யானை புகுந்தது. தற்போது வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் எல்லையோரம் உள்ள காப்புக் காட்டில் முகாமிட்டுள்ளது. இதனை ஒடுகத்தூர் மற்றும் ஆம்பூர் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி