ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை ஆகஸ்ட் 30 முதல் செப். 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படும். உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படும் வாகனங்கள் வாலாஜா, ஈவிஆர் சாலை வழியாக செல்லலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.