தூங்கும் முன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் என பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், வாழைப்பழத்திற்கும் தூக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என ஆய்வு ஒன்று தற்போது தெரிவித்துள்ளது. தூங்கும் முன் தயங்காமல் நீங்கள் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஆனால், தூக்கத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். அதிக ரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் மட்டும் வாழைப்பழத்தை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்.