மன்னர் வகையறா' படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ரூ.3.6 கோடியை, 18% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடனாக பெற்ற ரூ.3.6 கோடியை விமல் திரும்ப அளிக்காததால் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூ. 3 கோடியை 18% வட்டியுடன் நடிகர் விமல் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.