மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது

83பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த அதி கனமழை காரணமாக வேலூர் மாநகர் காட்பாடிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர், விஜி ராவ் நகர், எம்ஜிஆர் நகர், பழைய காட்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. அதிகாலையில் திடீரென கழிவுநீரோடு சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர் இது குறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது

செய்தியின் எதிரொடியாக பாதிக்கப்பட்ட முத்தமிழ் நகர், விஜி ராவ் நகர், எம்ஜிஆர் நகர், பழைய காட்பாடி சாலைபகுதி உள்ளிட்ட இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாநகராட்சி ஆணையர் ஜானகி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

அப்போது அப்பகுதி பொதுமக்கள் மழை வரும் போதெல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது இதனால் வீட்டில் உள்ள டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் என எலக்ட்ரானிக் சாதன பொருட்கள் அனைத்தும் பாழாகி விடுவதாகவும் இது போன்ற நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மாநகராட்சி அதிகாரிகள் எடுப்பதில்லை எனவும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி