ஆம்பூரில் 3மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிவறும் கனமழை!

61பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தாலும் புழுக்கமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர் இந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென மழை தொடங்கி தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னிகாபுரம், பச்சகுப்பம், வடபுதுபட்டு , தேவலாபுரம், வெங்கடசமுத்திரம் , மிட்டாளம் , மேல் சான்றோர்குப்பம் வீராங்குப்பம் குமாரமங்கலம் கரும்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்து வந்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அதே போல் ஆம்பூர் ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி