ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷியோ என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சுமார் 2,000 டேட்டிங்குகளுக்கு மேல் சென்றுள்ளார். அவர் சென்ற அனைத்து டேட்டிங்கும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் இருந்த அவருக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. அதன்படி, தனது அனுபவத்தை வைத்து சொந்தமாக டேட்டிங் ஏஜென்ஸி ஒன்றை உருவாக்கியுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது, இலவச ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறார்.