பிரதமர் மோடி ஒரு BC அல்ல என்றும், சட்டப்பூர்வமாக மதம் மாறிய BC என்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 2002 வரை மோடி உயர் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறிய முதல்வர் ரேவந்த், குஜராத் முதல்வரான பிறகு, புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி அவர் தனது சாதியை பிற்படுத்தப்பட்டவர்களுடன் கலந்ததாக கூறியுள்ளார். மேலும் தான் எதையும் அபத்தமாக பேசவில்லை ஆதாரத்துடன் தான் பேசுகிறேன் என கூறியுள்ளார்.