சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1996-2001 ஆண்டுகளில் சுற்றுலா அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.17 லட்சம் சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.