சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இன்று(பிப்.14) ஒப்படைக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டபோது அவரது வீட்டிலிருந்து 27 கிலோ தங்க நகைகள், ஆவணங்கள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இந்த வழக்கு 2004இல் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அவை அனைத்தும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.