தஞ்சாவூர் அதிராமப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் பரக் கலக்கோட்டையில் அமைந்துள்ளது பொது ஆவுடையார் கோயில். இரண்டு முனிவர்களுக்கு இடையே நடந்த பூசலை தீர்த்து வைத்ததால் ‘மத்தியபுரீஸ்வரர்’ என இறைவன் அழைக்கப்படுகிறார். கார்த்திகை சோமவாரத்தில் இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. மரத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள சுவருக்கு உட்பட்ட பகுதி கருவறையாகவும், ஆலமரம் சிவபெருமானாகவும் வழிபடப்படுகிறது.