சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ இரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் CMRL சமர்ப்பித்துள்ளது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மொத்தமாக 15.46 கி.மீ தூரத்திற்கு 13 நிலையங்களுடன் மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்க ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.