நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்ததும் தன் நாட்டுக்கு திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் சைபீரியா, மியான்மர், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அரிவாள் மூக்கன், பட்ட தலை வாத்து, பட்டை வாயன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து, செங்கால் நாரை, பாம்பு தாரா, பெலிக்கன்ஸ், கிங்பிஷர் உட்பட 43 வகையான பறவைகள் குறித்துள்ளன.