காவடிகள் கொண்டு சென்று முருகனை வழிபட ஒரு தரப்பினர் எதிர்ப்பு

79பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருஞானசம்பந்தர் பஜனை மடம் ஏங்கி வருகிறது.

இந்த மடத்தில் முருகர், வள்ளி, தேவவானை, விநாயகர், ஐயப்பன், ஆகிய கடவுள்களின் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது என்றும் இதனால் மடத்தின் புனிதம் கேட்டுவிடும் என்றும் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று ஆடி மாதம் என்பதால் முருகனுக்கு காவடி எடுத்து செல்லும்போது மற்றொரு தரப்பினர் வழக்குத் தொடர்ந்த எதிர் தரப்பினரை மடத்திற்குள் காவடி எடுத்து வழிபடுவதற்கு மடத்தை மூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களை மடத்திற்குள் அனுமதித்தனர்.

திருஞானசம்பந்தர் பஜனை மடத்தில் சாமி சிலைகளை வைத்து வழிபடக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களை மடத்தை மூடி உள்ளே அனுமதிக்காமல் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி