ஏலகிரி மலையில் வேன் விபத்து.. 13 பேர் படுகாயம்

62பார்த்தது
ஏலகிரி மலையில் வேன் விபத்து.. 13 பேர் படுகாயம்
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வமணி குடும்பத்தினர் 13 பேர், இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா வேனை ஆவடி பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் பன்னிரண்டாவது கொண்டை ஊசி வளைவில் வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரும்பு தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சுப்பிரமணி, செல்வமணி, தனுஸ்ரீ, பானுமதி, ராஜேஷ், சாம்ரீஸ், ஆனந்த், தெய்வக்கணி, முகிலிஸ்வரன், பிரதீஷ், சமயந்திரன் ராஜீ, சொக்கலிங்கம் உள்ளிட்ட 13 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி