நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 ஆரம்பப்பள்ளிகள், 49 நடுநிலைப்பள்ளிகள், 31 உயர்நிலைப்பள்ளிகள் 28 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 320 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 30000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.