திண்டுக்கல்லில் உண்ணி காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். உண்ணி காய்ச்சல் என்பது பெபிசியா என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இது மழைக்காலங்களில் கால்நடைகள் வாயிலாக இனப்பெருக்கமடைந்து, மனிதர்களை கடிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, தலைவலி, உடல் சோர்வு, சொறி, உடல் முழுவதும் அம்மை போன்ற புள்ளிகள் ஏற்படும். அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவமனையை அணுக வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.