பொதுவாகவே திராட்சையில், அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளன. கருப்பு திராட்சை நீரிழிவு, புற்றுநோய், அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்க உதவுவதோடு இதயத்திற்கும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். பச்சை திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது, மேலும் மலச்சிக்கலையும் போக்கும். எனவே, கருப்பு மற்றும் பச்சை என இரண்டு திராட்சைகளிலுமே நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.