அமெரிக்கா – தென்கொரியா படைகள் கூட்டு ராணுவ பயிற்சி

84பார்த்தது
அமெரிக்கா – தென்கொரியா படைகள் கூட்டு ராணுவ பயிற்சி
அமெரிக்கா இராணுவ வீரர்களுடன் இணைந்து தென்கொரியா படைகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர். வடகொரியாவின் ஏவுகணை சேதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியாவின் தேபேக் என்ற மலைப்பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் அமெரிக்க படைவீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். மலைப்பகுதியில் துப்பாக்கி சூடு பயிற்சி, போர் விமானம் மூலம் இலக்கை தாக்கி அடித்தல் விமானங்களை குறிவைத்து தாக்குதல் போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டனர். நவீன ரக துப்பாக்கிகளும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி