பதிவு செய்யாத ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: முக்கிய முடிவு

68பார்த்தது
பதிவு செய்யாத ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: முக்கிய முடிவு
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு, அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கி வரும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் விவரங்களை www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த பேருந்துகளில் பயணிகள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி