அடம்பிடிக்கும் குழந்தைகள்..! பெற்றோர்கள் ஜாக்கிரதை

59பார்த்தது
அடம்பிடிக்கும் குழந்தைகள்..! பெற்றோர்கள் ஜாக்கிரதை
குழந்தைகளை எழுப்புவதில் இருந்து தூங்க வைப்பது வரை ஒவ்வொரு செயலும் பெற்றோருக்குச் சவாலான விஷயம் தான்.! பொதுவாக, குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. அம்மா நம்மைத் தூக்கியே வைத்திருக்க வேண்டும் என அழுது அடம் பிடிப்பார்கள். கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும், சாப்பிடுவது முதல் பொம்மை கேட்பது வரை பட்டியல் நீளும். அடம்பிடித்தல் என்பது மரபணு வழியாகவும், பழக்கத்தாலும் வருகிறது. முடிந்த வரை இரண்டு அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகளின் அடம்பிடிக்கும் போக்கை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக்குப் போக மாட்டேன் என்பதில் ஆரம்பித்து சைக்கிள், பைக் வரை சென்று நிற்பார்கள்.

தொடர்புடைய செய்தி