தமிழ்நாட்டில் சுமார் 2000 ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில் வெளிமாநில பதிவெண் கொண்ட 547 பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள் இயங்காது என்பதால் அதில் முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்குவதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.