சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவரின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த 2023 செப்டம்பரில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சில சர்ச்சை கருத்துகளை கூறியிருந்தார்.