திருப்பூரை சேர்ந்த வெங்கடாச்சலம் (45), ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சேகர் என்பவரது ஆயில் மில்லில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். சேகருக்கும் அந்த மில்லில் பணிபுரியும் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனிடையே வெங்கடாச்சலத்திற்கும் அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது சேகருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேகர், வெங்கடாச்சலத்தை மது அருந்த அழைத்துச்சென்று காரை ஏற்றி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் சேகர் மற்றும் ஓட்டுநர் மணியை கைது செய்துள்ளனர்.