ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் சுமார் 200 மி.கி கொலஸ்ட்ரால் உள்ளது. அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சரியாக வேக வைக்காத மஞ்சள் கரு வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சரியாக வேகாத மஞ்சள் கருவில் கிருமிகள் இருப்பதால் ஆஃபாயில் போன்று சாப்பிடக்கூடாது. அதேபோல் பச்சை முட்டை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். முழுதாக வேக வைத்த முட்டையை அளவோடு சாப்பிடலாம்.