திருமண யோகத்திற்கு செவ்வாய் மற்றும் சுக்கிரனின் நிலை வலுவாக இருக்க வேண்டும். இந்த கிரகங்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாக வாய்ப்புள்ளது. சுக்கிரன் வலுவிழந்து இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை வெள்ளைப் பொருட்கள், பால், தயிர், சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். இதனால் சுக்கிர பலம் பெற்று திருமணம் கைகூடும். திருமண யோகத்திற்கு பங்களிக்கும் மற்றொரு கிரகம் வியாழன். வியாழன் பலவீனமாக இருப்பவர்கள் மஞ்சள் நிற பொருட்கள், ஆடைகளை தானம் செய்யலாம்.