பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசு வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் நாளை (ஜன.09) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.