விமானம் மோதி 36 ஃபிளமிங்கோ பறவைகள் பலி

61பார்த்தது
விமானம் மோதி 36 ஃபிளமிங்கோ பறவைகள் பலி
மும்பையில் திங்கள்கிழமை எமிரேட்ஸ் விமானம் மோதியதில் 36 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்தன. நகரின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் எமிரேட்ஸ் விமானம் ஃபிளமிங்கோக்கள் மீது மோதியது. இதனால் ஏராளமான ஃபிளமிங்கோக்கள் இறந்தன. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்த ஃபிளமிங்கோக்களை வனத்துறையினர் கொண்டு சென்றனர். விமான நிறுவனம் இன்னும் இது குறித்து பதிலளிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி