முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று (மே 21) தேசிய பயங்கரவாத ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மனித வெடிகுண்டு தாக்குதலில் இறந்து போன உதவி ஆய்வாளருக்கு போலீஸார் மரியாதை செலுத்தினர். 1991 சம்பவத்தில் குன்றத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த எத்திராஜூலு என்பவரும் பலியானார். அவரின் நினைவுத் தூணுக்கு குன்றத்தூர் ஆய்வாளர் வேலு தலைமையில் போலீஸார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.