பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

85பார்த்தது
பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்து விளாசினார். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடைசி பந்தில் 1 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. தனி ஒருவராக இறுதிவரை ஆடிய பட்லர், இம்பேக்ட் வீரராக மாறினார். ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 107* ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

ரியான் பராக் (34), பாவெல் (26) உதவினர். ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி