இன்றைய ராசிபலன் 26-11-2023

76172பார்த்தது
மேஷம்: நீங்கள் இன்று எந்த சூழலிலும் நிதானமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்தநாள் சவாலான நாளாக இருக்கலாம். குறித்த நேரத்தில் பணியை முடிக்க தாமதமாகலாம். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும். மனதில் இருக்கும் குழப்பத்தை வாழ்க்கைத் துணையிடம் கூறி ஆறுதல் அடைவீர்கள். ரிஷபம்: இன்று சிலருக்கு மன உளைச்சல் உண்டாகலாம். தொண்டை மற்றும் கால் விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையால வேண்டும். உத்தியோக பணியில் தாமதம் ஆகலாம். தம்பதிகளுக்கு இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற பண விரயங்கள் உண்டாகலாம். மிதுனம்: இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சிறந்த ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நல்லுறவு மேம்படும். உயர் அதிகாரிகள் உங்களின் திறமையை பாராட்டுவார்கள். பணியில் செயல்திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மன அமைதியுடன் எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும். இன்று நீங்கள் விரும்பியது நிறைவேறும் நாளாக இருக்கும். கடகம்: இன்று நாள் முழுவதும் சற்று பதட்டமான காணப்படுவீர்கள். நிதானமாக எந்த விஷயத்தையும் எடுத்துக்கொள்ளவும். புதிய முயற்சி எடுப்பதை தவிர்க்கவும். சவாலான பணியை செய்ய நேரிடும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் பொறுமையாக இருக்கவும். வாழ்க்கைத் துணையுடன் கோவமாக பேச வேண்டாம். இல்லையெனில் விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நிலை பாதிக்கப்படலாம் கவனம். சிம்மம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். கால் வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டாகலாம். வேலைச் சுமை அதிகமாக இருக்கும். ஆன்மிகம் மீது ஈடுபாடு அதிகரிக்கும். கன்னி: தேவைக்கு ஏற்ப பணவரவு இல்லாத சூழல் உண்டாகலாம். கழுத்து அல்லது வயிறு வலி உண்டாகலாம். உத்தியோகத்தில் பணி அதிகமாக காணப்படும். பிறரிடம் வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். நிதானமாக இருந்தால் கடுமையான எந்த சூழ்நிலையையும் சமாளித்து விடுவீர்கள். துலாம்: இன்று உடலின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் சேமிப்பு மேம்படும். கணவன் - மனைவி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். உத்தியோக பணியை மகிழ்ச்சியாக மேற்கொள்வீர்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும். உற்சாகத்துடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பீர்கள். இன்று முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். விருச்சிகம்: நிதிநிலை திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். முழு கவனத்துடன் வேலையை செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். அசால்ட்டாக எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். தனுசு: சற்று மந்தத்தன்மையுடன் காணப்படுவீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொண்டால் நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமையை மேம்படுத்த வாய்ப்புகள் கைகூடி வரும். பணவரவு சற்று மந்தமாக இருக்கும். தந்தையின் உடல் நிலையில் கவனம் வேண்டும். மகரம்: இன்று உங்களுக்கு பல தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் விவாதம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பொறுமையாக இருக்கவும். பண இழப்பு நேரிட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சில இன்னல் வந்து நீங்கும். கும்பம்: வளர்ச்சிக்கான நாளாக இன்றைய நாள் இருக்கும். நினைத்த விஷயத்தை நிறைவேற்றும் வாய்ப்பு அமையும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிம்மதியான பணி சூழல் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். எடுக்கும் முக்கிய முடிவுகள் நற்பலனைத் தரலாம். பணவரவு சிறப்பாக இருப்பதால் சேமிப்பு உயரும். மீனம்: ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். கணவன், மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தின் சூழல் சிறப்பாக இருக்கும். எந்த செயலையும் திட்டமிட்டு மேற்கொள்ளவும்.

தொடர்புடைய செய்தி