இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் நிறுவனத்தில் படித்து வரும் சென்னை மாணவர் மகஷ்வரகன் (20). இவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மின்னஞ்சல் அமைப்பை ஹேக் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நாசாவின் பாதிப்பு வெளிப்படுத்தல் கொள்கையின் (VDP) கீழ் உள்ள Bugcrowd மூலமாக இளைஞர் நாசாவுக்கு இந்தத் தகவல் தெரிவித்தார். இதனை அறிந்த நாசா அந்த இளைஞரின் திறமையை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளது.