சிலம்பம் சுற்றி அசத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்

66பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வைர விழா நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (அக்., 06) நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ பார்வையிட்டார். அப்போது அருகில் குழந்தைகள் சிலம்பம் கற்று கொண்டிருந்தனர். அங்குள்ள குழந்தைகள் கேட்டு கொண்டதன் பேரில் செங்கோட்டையன் சிலம்பம் சுற்றி மகிழ்வித்தார். அனைவரும் கரகோஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி