மேஷம்: இன்று நீங்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதமாகும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. வீட்டில் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படும். அலுவலகத்தில் அதிக பணி காரணமாக மன அழுத்தம் ஏற்படும்.
ரிஷபம்: இன்று நீங்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். சிலருக்கு களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். தேவையில்லாமல் வீண்கவலை ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: இன்று வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
கடகம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் மனக்கவலை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அதிக நேரம் எடுக்கும்.
சிம்மம்: இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.
கன்னி: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்களில் தாமதம் ஏற்படும். இதன் காரணமாக வீண்கவலை இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்: இன்று உங்களுக்கு நேரம் சரியில்லை. எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.
விருச்சிகம்: வேலையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன
பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும்
முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.
தனுசு: இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களின் கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள்.
மகரம்: இன்று எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையும்.
கும்பம்: இன்று உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். செயல் திறமை அதிகரிக்கும். வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.
மீனம்: இன்று பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வயதானவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும்.