மேஷம்: குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. பெற்றோர் உடல்நலனில் அதிகம் கவனம் செலுத்துங்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ரிஷபம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.
மிதுனம்: பிற்பகலுக்கு மேல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். சங்கடம் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம்.
கடகம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்: இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். எதிர்பார்த்த பணம் இன்று கைக்குவரும். எந்த கவலையும் இல்லாமல் மகிழ்சியாக இருங்கள்.
கன்னி: இன்று உங்களுக்கு சாதகமான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள். வியாபாரத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாக காணப்படும்.
துலாம்: உறவினர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வீண்விவாதங்களை தவிர்த்துவிடுங்கள். வெளியூரில் இருந்து உறவினர் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு: இன்றைய நாள் சாதிக்கும் நாளாக அமையும். குடும்பத்தினர் மூலம் எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் மட்டும் பொறுமை அவசியம். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்: வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
கும்பம்: இன்று நீங்கள் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலக
வேலை சிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மீனம்: எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாகும். தேவையில்லாமல் பெற்றோருடன் சண்டை ஏற்படலாம்.