இன்றைய ராசிபலன் 17-11-2023

65062பார்த்தது
மேஷம்: ளிதில் முடிய வேண்டிய சில காரியங்கள் பல இழுபறிக்கு பின்னர் தான் முடியும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். சுபநிகழ்வுகளால் சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். ரிஷபம்: மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். வெளியூர் பயணம் பற்றிய எண்ணம் தோன்றும். சகோதரிகளின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மிதுனம்: தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகமாகும். உத்தியோக பணியில் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவு பிறக்கும். எதிர்பாராத உதவிகளால் இழுபறி வேலை நிறைவு பெரும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். கடகம்: இன்று உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அதனால் உங்களுக்கு ஆதாயம் ஏற்படும். திடீர் வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பயணங்களால் வாழ்வில் திருப்பம் ஏற்படும். சிம்மம்: உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கடன் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். பிடிக்காத நிகழ்வுகளால் மனதில் மாற்றம் உண்டாகும். கன்னி: தனவரவுகளில் இருந்த நெருக்கடி குறையும். குணத்தில் சில மாற்றம் ஏற்படும். சிந்தனையில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் புது நபர்களின் அறிமுகம் ஏற்படும். கடன் பிரச்னை குறையும். புதிய விஷயங்கள் மீது ஆர்வம் அதிகமாகும். வியாபார ரீதியான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். துலாம்: உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்வி மீது இருந்த ஆர்வமின்மை குறையும். எதிர்பாராத கடன் உதவிகள் சாதகமாகும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விருச்சிகம்: துணிச்சலான பேச்சுக்களின் மூலம் காரியம் வெற்றியடையும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். தனிப்பட்ட கருத்தை கூறும் போது கவனம் வேண்டும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். மனதில் இருந்த வந்த குழப்பம் நீங்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். தனுசு: வீடு விற்பனையில் இருந்த தாமதம் விலகும். கலைத்துறை மீது ஆர்வம் ஏற்படும். ஆபரணச் சேர்க்கை மீது எண்ணம் அதிகரிக்கும். மனைவியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். கையில் பணப்புழக்கம் அதிகளவில் சேரும். மகரம்: மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உங்களின் சாதுர்யமான பேச்சால் ஆதாயம் ஏற்படும். மற்றவர்கள் பற்றி கருத்து கூறுவதை குறைக்கவும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மீனம்: வெளியூர் பயணங்கள் சாதகமாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீங்கள் விரும்பியதை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனையால் தெளிவு பிறக்கும்.

தொடர்புடைய செய்தி