மேஷம்: நிதி ரீதியாக இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வார இறுதியில் உங்களுக்கு புதிய
வேலை தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்துடன் எங்கேயாவது வெளியூர் சென்று வரும் சூழல் உருவாகும்.
ரிஷபம்: உங்களின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். வியாபாரிகளுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்குப்
பதவி உயர்வு கிடைக்கும். பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு பயமும் தேவையில்லை. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு அமையும்.
கடகம்: உங்களின் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன் வீண் பிரச்னை உருவாகும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. முக்கியமான வணிக
முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உடல்நலனில் சிறு சிறு பாதிப்புகள் இருக்கும்.
சிம்மம்: உங்கள் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல்நலனில் முன்னேற்றம் காணப்படும். குலதெய்வ கோயிலுக்கு செல்வது தள்ளிக்கொண்டே போகும். உறவினர்களால் புதிய சிக்கல் ஏற்படும் என்பதால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி: பணத்தை அதிக அளவில் செலவிடுவதால் இன்று பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். புதியவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாகப் பழக வேண்டும். கொடுங்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
துலாம்: இன்று முக்கியமான சில வேலைகள் முடிவடையாமல் போகலாம். பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தேவையில்லாமல் அதிக பணம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மோசமடைய வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்: காதலில் இருப்பவர்களுக்கு இடையே சில சண்டைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் நட்பை பேண முயற்சிக்க வேண்டும். உங்களின் எதிர்கால திட்டங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய
முடிவுகள் எடுக்கும்முன் நன்றாக யோசித்து எடுக்க வேண்டும்.
தனுசு: திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று நாள் முழுவதும் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
மகரம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் புதிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்: இன்று யாரிடமும் கோவப்பட வேண்டாம். உங்களுக்கு நேரம் சரியில்லை என்பதால் முடிந்தவரை அமைதியாக இருப்பது நல்லது. கணவன் - மனைவி இடையே சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல
வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
மீனம்: இன்று அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படும். உடல்நிலை திடீரென பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. இல்லையென்றால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். திருமணத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.