இன்றைய ராசிபலன் 11-12-2023

73919பார்த்தது
மேஷம்: இன்று எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு விஷயத்தில் நல்லது நடக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வீர்கள். ரிஷபம்: வரவு செலவு இரண்டும் இருக்கும், சாதுர்யமாக செயல்பட்டு சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு நல்லது நடக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. மிதுனம்: இன்று நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழில் சற்று மந்தமாகக் காணப்படும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை எதிர்ப்புகள் குறைந்து மனஅமைதி உண்டாகும். வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளைக் கையாள வேண்டும். கடகம்: பணியிடத்தில் சக ஊழியர்களால் சிக்கல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் தடைபடும் என்பதால் முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. சிம்மம்: வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இருக்கும். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். சகோதரனின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தலாம், அனுசரித்துப் போவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எந்த செயலிலும் ஒரு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிலர் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கன்னி: அண்டை வீட்டாரால் வீண் விவாதம் ஏற்படும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். கடன் பிரச்சனையால் நாள் முழுக்க கவலையாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்படும். துலாம்: உங்கள் துணையால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணியில் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். விருச்சிகம்: வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் மற்றவர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை மேம்படும். பணவரவு சுமாராக இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வழக்கு சார்ந்த காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். தனுசு: எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆன்மீக வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும். கூட்டுத் தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். நினைத்த காரியம் நிறைவேற தடை ஏற்படும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. மகரம்: இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். வெறுத்து ஒதுக்கிய நபர்கள் உங்களைத் தேடி வந்து உதவி கேட்பார்கள். பணியிடச்சூழல் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வராத கடன்கள் உங்களை வந்தடையும். உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று வரும் சூழல் உருவாகும். கும்பம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வர வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும். தாய்வழி உறவினர்களால் நல்ல செய்தி வந்து சேரும். மீனம்: எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். கடனாகக் கொடுத்த படம் கைக்கு வரும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். எதிர்பாராமல் செய்த உதவியால் சமுதாயத்தில் மதிப்பு உயரும்.

தொடர்புடைய செய்தி