ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7-ம் தேதி உலக பருத்தி தினம் கொண்டாடப்படுகிறது. பருத்தியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், பருத்தி விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலக பருத்தி தினத்தின் முக்கிய நோக்கம் பருத்திக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதாகும். உலகளவில் 80 நாடுகளில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக பருத்தி விளங்கி வருகிறது.