வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

58பார்த்தது
வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜுலை 18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி