திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்தில் பந்து எடுப்பதற்காக 9 வயது சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளனர். இதைக்கண்ட 9 வயது சிறுவனுடைய தாயார் வந்தவாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வந்தவாசி மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்த இரண்டு சிறார்களையும் கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.